Saturday, May 23, 2009

இலவம்பேடு பற்றி சாரு நிவேதிதா...

Charu Niveditha, an outstanding post-modernist writer in Tamil in one of his article published in his website, says...

……… எனக்கு இந்த பூலோகத்தில் உள்ள 107 திவ்ய தேசங்களையும் தரிசித்து விட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நான் இப்போது ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவனாகி விட்டதால் ஏற்பட்ட திடீர் ஆசை அல்ல இது. நான் நாத்திகனாக இருக்கும் போதேகூட வழிபாட்டு ஸ்தலங்களை நோக்கித்தான் சென்று கொண்டிருப்பேன். 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஜம்முவிலுள்ள வைஷ்ணவோ தேவி கோவிலுக்கு 10 மணி நேரத்துக்கு மேல் மலை மீது ஏறிச் சென்றிருக்கிறேன்.

இப்போது சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கலுக்கும், சென்னைக்குப் பக்கத்திலுள்ள இலவம்பேடுக்கும் செல்ல ஆசை. காரணம் ஒரு கதை. விஷ்ணுவின் மகனான மன்மதனை சிவன் எரித்து விட்ட கதையை நாம் அறிவோம். பின்னர் கிருஷ்ணாவதாரத்தில் மன்மதன் பிரத்யும்னன் என்ற பெயருடன் கிருஷ்ணனின் மகனானப் பிறந்தான். பிரத்யும்னனின் மகன் அநிருத்தன். இவன் மீது பானாசுரனின் மகளான உஷை காதல் கொள்கிறாள். ஆனால் அவனை நேரில் பார்த்ததில்லை. கனவிலேயே உருவான காதல் அது. தான் கனவில் கண்ட உருவத்தை சித்திரக்காரியான தன் தோழி சித்ரலேகாவைக் கொண்டு வரையச் செய்கிறாள் உஷை. சித்ரலேகாவுக்கு மாய வித்தையும் தெரியும். அநிருத்தன் உறக்கத்தில் இருக்கும்போது அவனே அறியாமல் அவனை உஷையிடம் தூக்கிக் கொண்டு வந்து விடுகிறாள் சித்ரலேகா.

பனாசுரனுக்கு இது தெரிந்து அநிருத்தனை சிறையில் தள்ளி விடுகிறான். இதை அறிந்த கிருஷ்ணன் பானாசுரனிடம் போரிட்டு தன் பேரனை சிறையிலிருந்து மீட்டு வந்து உஷைக்கும் அவனுக்கும் மணம் செய்து வைக்கிறான். அத்திருமணம் நடந்த இடம்தான் திருத்தங்கல்.

கிருஷ்ணன் அநிருத்தனை மீட்டு வரும்போது அந்த சந்தோஷத்தில் இலவம் என்ற வனத்தில் பேடு என்ற கூத்தை ஆடினானாம். அதுதான் இலவம்பேடு. சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரிக்கும் மீஞ்சூருக்கும் இடையில் இருக்கிறது இலவம்பேடு ………

நன்றி: http://charuonline.com/newarticls/punarabi.html

1 comment:

  1. Guna, very good collection, I could see your hard work to bring the informations to web. We born and brought in this village, now I could realize that we lived in a place which is having hostorical path. Thanks for posting such a wonderful information.

    ReplyDelete